உழைக்காமல் பத்து ரூபாய் வசூல் செய்தே வாழ்பவர்கள் தான் திமுகவினர்! - அண்ணாமலை.
Aug 22, 2025, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உழைக்காமல் பத்து ரூபாய் வசூல் செய்தே வாழ்பவர்கள் தான் திமுகவினர்! – அண்ணாமலை.

Web Desk by Web Desk
Oct 31, 2023, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 பனைமரங்களை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இன்று வரை திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ராசிபுரம் நகரில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

ராசிபுரம் நகரம், நெய், பட்டு மற்றும் ஜவ்வரிசிக்குப் புகழ் பெற்றது. நெய் ஒரு நாளைக்கு 300 கிலோவில் இருந்து 500 கிலோ வரை இங்கு தயாரிக்கப்படுகிறது. ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை தமிழக பாஜக முன்னெடுத்துச் செல்லும்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், பனை வெல்லம் மற்றும் பனை பொருட்களை நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்வோம் என்று திமுக வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்தபின் வெறும் அறிவிப்போடு நிறுத்திக் கொண்டது. ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டிபுதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கரையான்தின்னிபுதூர் பகுதியில் பனைமரத் தொழில் அழிந்து வருகிறது. ஆனால் இன்று வரை பனைமரங்களை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 03.06.2009 அன்று, அன்றைய திமுக அரசு அமைத்த நீதிபதி கு.ப.சிவசுப்பிரமணியம் தலைமையிலான குழுவின் அறிக்கையில், ‘கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருள்களை மூலப்பொருள்களாக வைத்து தயாரிக்கப்படும் வெளிநாட்டு வகை மதுபானங்களை அனுமதிக்கும்போது குறைந்த பாதிப்பு கொண்ட கள்ளைத் தடை செய்வதை நியாயப்படுத்த முடியாது.

நீண்ட நாட்களுக்கு கள் மீதான தடையைத் தொடர்ந்து நீட்டிப்பது நியாயமல்ல’ என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிக்கையை திமுக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், கள் விற்பனை செய்தால், விவசாயிகளுக்குத் தான் வருமானம். திமுகவினருக்கு பணம் சம்பாதிக்க முடியாது. பனை மரத்தால் எப்படி ரூ 1 லட்சம் கோடி வரை வருமானம் ஈட்டலாம் என வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். ஆனால் சாராய ஆலைகள் நடத்தும் தீய சக்தி திமுக அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு திமுக செய்த பங்களிப்பு பூங்காவுக்கு செம்மொழி பூங்கா என்று பெயர் வைப்பது மட்டும் தான். திமுகவினர் வசூல் செய்வதற்காக மட்டுமே இந்த வருடம் பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது தான் ராசிபுரம் செம்மொழி பூங்கா.

திமுக நகர்மன்றத் தலைவர் கவிதா சங்கர் சொல்லி, ராசிபுரம் திமுக நிர்வாகி புஷ்பா, சிறுவர்களுக்கு 10 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறார். டாஸ்மாக்கிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல். பொதுமக்கள் வரிப்பணத்தில் கட்டிய பூங்காவிலும் 10 ரூபாய் வசூல். உழைக்காமல் பத்து ரூபாய் வசூல் செய்தே வாழ்பவர்கள் தான் திமுகவினர்.

திமுக அரசு, விவசாய நிலத்தை ஆக்கிரமித்துத்தான் சிப்காட் அமைப்பார்கள். அதே போல தற்போது, தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்காக ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தமிழக பாஜக துணை நிற்கும். இந்தத் தொழில்நுட்ப பூங்காவை வேறு இடத்தில் அமைக்கவேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளில், தமிழக கிராமங்களுக்குச் சாலை அமைக்க நமது மத்திய அரசு 3376 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுத்த அறிக்கையின்படி, தமிழகத்தில் சாலை இணைப்பு இல்லாத பகுதிகளே இல்லை என்று முற்றிலும் பொய்யான தகவல் கொடுத்துள்ளது.

ராசிபுரம் பகுதியை அடுத்த போதமலை மலைப்பகுதியில் கீழூர் மேலூர் கிராமத்திற்கு, பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என்ற திட்டத்தின் படி, 2016ஆம் ஆண்டு மின்சாரம் வழங்கப்பட்டது. சமீபத்தில் அந்த கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி பழுதாகியுள்ளது. சாலை வசதி இல்லாததால் அந்த 600 கிலோ எடையுள்ள மின்மாற்றியை கிராம மக்கள் தோளில் தூக்கிக் கொண்டு வந்து பழுது பார்த்துள்ளனர். சாலை அமைக்க மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே போனது? சாலை அமைக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதிவேந்தன்? மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்பு வனத்துறையில் லஞ்சம் பலமடங்கு உயர்ந்துள்ளது.

தடையில்லா சான்றிதழ் வழங்க ஏக்கருக்கு இரண்டு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தியுள்ளார்கள். 120 வனக்காவலர் பணியிடமாற்றத்திற்கு மட்டும் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்.

தமிழகத்திற்கு நமது பாரதப் பிரதமர் வழங்கிய 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று நாமக்கலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் மற்றும் 8 பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தும் குடிநீர் திட்டம் நமது மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 854 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்ருத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு இதுவரை 4288 கோடி ரூபாய் நமது மத்திய அரசு வழங்கியுள்ளது. 21,947 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,19,462 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,45,525 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,17,778 பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், 1,21,516 பேருக்கு பிரதமரின் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டம், 85,505 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், நாமக்கல் மாவட்டத்திற்கு 3422 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.

வரும் பாராளுமன்ற தேர்தலில், ஊழல் திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் மக்களுக்கான நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து பிரதமர் கரங்களை வலுப்படுத்துவோம்.

Tags: bjp k annamalaiannamalai en mann en makkal rally
ShareTweetSendShare
Previous Post

வடகிழக்கு பருவமழை: 43 சதவீதம் குறைவு!

Next Post

இலங்கையின் கடல் வளங்களை ஆராய தொடங்கிய சீனாவின் அதிநவீன கப்பல்!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies