சென்னை தேனாம்பேட்டையில், டிஎன்பிஎஃப்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
மின்சாரத்துறை உள்கட்டமைப்பை நிர்வகிப்பது, போதிய நிதியை துறை சார்ந்த பணிகளுக்கு அளிப்பது உள்ளிட்ட முக்கியமான பணிகள் இந்த டிஎன்பிஎஃப்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், டிஎன்பிஎஃப்சி அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான வரி செலுத்திய புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு மேற்கொண்டனர்.
அப்போது, வரி சரிபார்ப்பு பணிகளை சோதனை செய்தனர். முக்கிய சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்துறை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது அரசு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் தொடர் ரெய்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.