அனைவரின் எதிர்பார்ப்பும் இந்திய உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதாகவே உள்ளது – நீரஜ் சோப்ரா.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை இந்தியா விளையாடிய 6 போட்டிகளில் 6 போட்டியிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் சிறந்த ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். நாளை மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிலையில் நேற்று நீரஜ் சோபர் இந்திய கிரிக்கெட் அணியை குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர், ” தற்போது அனைவரின் எதிர்பார்ப்பும் இந்திய உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதாகவே உள்ளது. அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்கள் மீது நான் அழுத்தத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அதேப் போல் இந்த உலகக்கோப்பையை இந்தியா நம் சொந்த மண்ணில் விளையாடுவதால் நிச்சயம் இந்தியாவே கோப்பையை வெல்ல வேண்டும்” என்று கூறினார்.