சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு இருந்த பாஜக கொடிக் கம்பத்தை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக அதிகாரிகள் அகற்றினர். இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழகம் முழுவதும், ஆயிரம் கொடிக்கம்பங்கள் நடப்படும் எனத் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதன் பேரில், தமிழகத்தின் தலைநகர் சென்னை, கோவை, புதுக்கோட்டை, திண்டுக்கல் என பல்வேறு இடங்களில் மாவட்டத் தலைவர்கள், மண்டல் தலைவர்கள் ஏற்பாட்டில் பாஜக கொடி கம்பம் ஏற்றும் நிகழ்வு வெகு விமரிசைாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷன் பகுதியில் கொடிக்கம்பம் அமைத்து பாஜக கொடி ஏற்றச் சென்ற மாவட்ட, மாநில நிர்வாகிகளை தடுத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
அதேபோல, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அனைத்து கட்சிகளின் கொடிக்கம்பம் உள்ள இடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தை ஏற்ற விடாமல் ஜனநாயகத்தைப் படுகுழியில் திமுக அரசின் காவல்துறை தள்ளியுள்ளது. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.
மேலும், பட்டுக்கோட்டையில் பாஜக கொடியை ஏற்றவிடாமல் தடுத்த, அராஜக திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து பாஜக நிர்வாகிள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினரை கொடியேற்ற விடாமல் போலீசார் கைது செய்து வருகின்றனர். போலீசாரின் இந்த செயலுக்கு பாஜக மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.