நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா, அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க போவது யார் ?
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெறுகிறது.
இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. உலகக் கோப்பை 2023 தொடரில் இரு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்த இந்தப் போட்டி முக்கியமானது. இத்தகைய சூழ்நிலையில், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றிபெற தங்களால் இயன்றவரை முயற்சி செய்வார்கள்.
இந்த உலகக் கோப்பை 2023 பொறுத்தவரை இரு அணிகளும்பலம் வாய்ந்த அணியாக இருப்பதால், இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.
மேலும் இரு அணிகளும் ஒரு நாள் போட்டியில் 71 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் நியூசிலாந்து 25 முறையும், தென்னாப்பிரிக்கா 41 முறையும் வென்றுள்ளது. ஐந்து போட்டிகள் எந்த முடிவையும் தரவில்லை.
அதேப்போல் இரு அணிகளும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் எட்டு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் நியூசிலாந்து ஆறு முறையும், தென்னாப்பிரிக்கா இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
2023 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் நியூசிலாந்து அணி 6 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் அரையிறுதிக்கு செல்வதற்கு வெற்றியைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் தென் ஆப்பிரிக்கா அணி 55% வெற்றி பெரும் என்றும், நியூசிலாந்து அணி 45% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.