ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெறுகிறது.
இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்கள் :
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா.
நியூசிலாந்து அணியின் வீரர்கள் :
டாம் லாதம் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி.