தீபாவளி என்பது தீப ஒளித்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
இந்த தீபாவளி 12-ம் தேதி வருகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அதாவது நவம்பர் 13 -ம் தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி அன்று இரவுதான் கொண்டாட்டங்கள் களை கட்டும் என்பதால், நவம்பர் 13 -ம் தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர் தமிழக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் மறுநாள் திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் அரசு பொது விடுமுறை அறிவித்தால் அது அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.