ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.538 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் ரூ. 848 கோடி வங்கிக் கடன் பெற்றார். இதில், அவர் 538 கோடி ரூபாய் வங்கிக் கடனை செலுத்தவில்லை. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து பண மோசடி வழக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயிலுக்குச் சொந்தமான 17 பங்களாக்கள், வணிக நிறுவனங்களை அமலாக்கத்துறை முடக்கியது.
அதபோல, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயிலுக்கு லண்டன் மற்றும் துபாயில் உள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.