பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார். அவருக்கு வயது 70.பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா.
இவர் ’கோபுர வாசலிலே’, ‘கரகாட்டக்காரன்’, ‘சங்கமம்’, ‘வின்னர்’ நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சித்தி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடலநலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று அதிகாலை காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வளசரவாக்ககத்தில் வைக்கப்பட்டுள்ள ஜூனியர் பாலையா உடலுக்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.