உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !
Mar 15, 2026, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெற்றது.

இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் தேம்பா பாவுமா களமிறங்கினர்.

இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 8 வது தேம்பா பாவுமா 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 28 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக ரஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கினார். குயின்டன் டி காக் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டுசென் சிறப்பாக செய்யப்பட்டு நியூசிலாந்து அணியின் பந்துகளை பறக்கவிட்டனர்.

இருவரும் பேட்டிங் தெறிக்கவிட்டனர் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இவர்களின் கூட்டணியை எவ்வளவு முயற்சி செய்து பிரிக்க முடியாமல் போனது. பின்னர் 40 வது ஓவரில் 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 116 பந்துகளில் 114 ரன்களுக்கு குயின்டன் டி காக் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் தனது பங்குக்கு நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை தெறிக்கவிட்டார். 47 வது ஓவரில் 9 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 118 பந்துகளில் 133 ரன்களை எடுத்து ரஸ்ஸி வான் ஆட்டமிழந்தார்.

பின்னர் சிறப்பாகா விளையாடி வந்த டேவிட் மில்லர் 49.5 ஓவரில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பௌண்டரீஸ் என அடித்து 30 பந்துகளில் 53 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி ஒரு பந்து இருக்கும் நிலையில் களமிறங்கிய ஐடன் மார்க்ராம் கடைசி பந்தில் சிக்சர் அடித்து 600 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்தது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 2 விக்கெட்களும், நீசம் மற்றும் ட்ரெண்ட் போல்ட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதனால் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற 358 ரன்கள் இலக்காக இருந்தது.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து வீரர்கள் களமிறங்கினர். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர்.

இதில் டெவோன் கான்வே 2 வது ஓவரில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்த 2 ஓவரிலேயே 5 பௌண்டரிஸுடன் வில் யங் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க க்ளென் பிலிப்ஸ் 4 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 50 பந்துகளில் 60 ரன்களை அடித்தார்.

இதனால் நியூசிலாந்து அணி 35 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4 விக்கெட்களும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்களும், ககிசோ ரபாடா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 133 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்கா வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென்னுக்கு வழங்கப்பட்டது.

Tags: south africa vs new zealandICC World Cup
ShareTweetSendShare
Previous Post

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

Next Post

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies