சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு: நவம்பர் 4 முதல் அமல்!
Oct 15, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு: நவம்பர் 4 முதல் அமல்!

Web Desk by Web Desk
Nov 2, 2023, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் வாகனங்களின் வேக வரம்பு, நவம்பர் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன ஓட்டிகள் வேகவரம்பை கடைபிடிப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது சென்னையில் மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன.

2003ம் ஆண்டில் விதிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களுக்கான வேக வரம்புகளை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் மாற்றியமைத்துள்ளது. புதிதாக நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகள்படி, சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 35 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 25 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.

அதேபோல் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 35 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.

இலகுரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 50 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலை கட்டமைப்புகளில் நவீன முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற உண்மைகளை கருத்தில் கொண்டு, சென்னை மாநகரில் பல்வேறு வகை வாகனங்களுக்கு 2003ல் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மறுமதிப்பீடு செய்து வேக வரம்பினை மாற்றியமைக்க வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமைத்தார்.

மேலும், சென்னை பெருநகரில் உள்ள சாலைகளின் வகை மற்றும் பல்வேறு வாகன வகைகள் மற்றும் இடங்களுக்கான வேக வரம்புகள் குறித்து இக்ககுழு பரிந்துரை செய்தது.

அதன்படி, இலகுரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 60 கி.மீ ஆகவும், கனரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், ஆட்டோக்களின் அதிகபட்ச வேக வரம்பு 40 கி.மீ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதுவே குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வகை வாகனங்களுக்குமான அதிகபட்ச வேக வரம்பு 30 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகன வேக வரம்புகளை அமல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, இந்த வேக வரம்பு நிர்ணயமானது நவம்பர் 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: chennai policevehicle speed
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை விசாரணை : ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால்!

Next Post

இந்தியாவுக்கு இலங்கை வைத்த ட்விஸ்ட் !

Related News

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!

திருச்சி : ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கி விட்டு சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பி ஓட்டம்!

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் – டெல்லியில் “சனாதனி” கிரிக்கெட் போட்டி!

விசாவுக்கான ஆங்கில தேர்வு – கடுமையாக்கும் பிரிட்டன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies