பாரத பிரதமராக மோடி பொறுப்பேற்றபின்னர், நாடு அபார வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா பரவல் காலத்திலும் கூட மற்ற நாடுகள் பொருளாதார ரீதியாகத் திண்டாடிய போதும், பாரதம் நிலைத்து நின்றது. இதனால், பிரதமர் மோடியின் சிறந்த ஆட்சியை உலக நாடுகள் தற்போதுவரை பாராட்டி வருகின்றன.
மேலும், ஜம்மு -காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு அங்கு விரைவான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீநகரில் முதன்முறையாகச் செயற்கை ரக்பி புல்தரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்தும் வகையில் ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் இந்த முயற்சியை எடுத்துள்ளது.
விளையாட்டு உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை ஈர்க்கவும், மாநிலத்தில் ரக்பி விளையாட்டை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி உதவுகிறது.
இதனிடையே, ஜம்மு – காஷ்மீர் விளையாட்டு கவுன்சில் மற்றும் அனைத்து இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும், இளைஞர்களிடையே விளையாட்டை மேம்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் சரியான நேரத்தில் வழங்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள ரக்பி புல்வெளியை நிறுவுவது விளையாட்டு வசதிகளை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூரில் திறமையாளர்களுக்கு விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான தளத்தையும் இதன் மூலம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.