மக்களவையில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா இன்று ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. எம்பியான இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி என்பவரிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் மக்களவை நெறிமுறைக்குழு அக்டோபர் 31ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் தனக்கு சம்மன் அனுப்புவதற்கு முன்பே ஊடகங்களில் செய்தி வெளியானதை காரணம் காட்டி மற்றொரு நாளில் ஆஜராக அனுமதிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பாஜக எம்பி வினோத் சோன்கர் தலைமையில் எம்பிக்கள் வி வைத்திலிங்கம், டேனிஷ் அலி, சுனிதா துக்கல், ராஜ்தீப் ராய் உள்ளிட்டோர் அடங்கிய குழு முன்பு இன்று அவர் ஆஜரானார்.