கோவை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தநிலையில் மாவட்டத்தில் இதுவரை 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருவமழை தொடங்கியதால், வீடுகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் எனவும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமெனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
















