சமூக வலைதளங்கள் மூலம் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், அடையாளம் தெரியாதவர்கள் வாட்ஸ்அப் மூலம் தனக்கு தொல்லை கொடுப்பதாகவும் மேயர் பிரியா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது அலுவலக தொலைபேசி எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் அழைத்து இடையூறு செய்வதாகவும், இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
















