பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது எனவும் மீண்டும் அது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டம் குறித்து கடந்த 23ம் தேதி பிரதமர் மோடி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இது பல மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது.
இந்தநிலையில் வீடியோ திடீரென முடக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக விளக்கம் அளித்த மெட்டா, தொழில்நுட்பக் கோளாறால் தவறு ஏற்பட்டது எனவும் திட்டமிட்ட நடவடிக்கை அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளது.
















