பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 28, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் 2030-க்குள் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் துறை ஏற்றுமதி இலக்கை நாடு மிக எளிதாக எட்டும் என்று பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாதுகாப்புத் துறையில் நாட்டின் தேவைக்குப் பெரும்பாலும் இறக்குமதியையே நம்பியிருந்த இந்தியா படிப்படியாக உள்நாட்டிலேயே பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது.

11 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 70 சதவீதம் வரை ஆயுதத் தளவாடங்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா தற்போது சுமார் 65 சதவீத பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது.

2013-14 நிதியாண்டில் 686 கோடி ரூபாயாக இருந்த நாட்டின் பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி 2025-26 நிதியாண்டில் 38,424 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் 5,500 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியாகும்.

பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பு ஏற்றுமதி 151 சதவீத உயர்ந்துள்ள நிலையில், தனியார் பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி பங்களிப்பு 14 அதிகரித்துள்ளது.

Make in India திட்டம் மற்றும் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை அடைவதற்கான முயற்சிகள் ஆகியவையே இந்தக் கூடுதல் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.

புவிசார் அரசியல் சூழல் இந்தியப் பாதுகாப்புத் துறைக்கான தேவையை அதிகரித்துள்ள நிலையில் 2030-க்குள் நிர்ணயிக்கப் பட்ட 50,000 கோடி ரூபாய் பாதுகாப்பு ஏற்றுமதி இலக்கை எளிதாக அடைய முடியும் என்று பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

குண்டு துளைக்காத உடைகள் (bulletproof jackets) மற்றும் தலைக்கவசங்கள் (ballistic helmets) முதல் பிரம்மோஸ் (BrahMos) அல்லது ஆகாஷ் (Akash) போன்ற சிக்கலான ஏவுகணை அமைப்புகள் வரை பல்வேறு வகையான இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் 145 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள ராஜேஷ் குமார் சிங் இந்தியாவின் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் அதிகளவிலான ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

வழக்கமான பீரங்கி குண்டுகள் (artillery shells) மற்றும் வெடிமருந்துகளுக்கான தேவை அதிகம் உள்ளதால் உலகளாவிய புவிசார் அரசியல் குழப்பங்களால் போர்ப் பதற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் பல நாடுகள் தங்கள் ஆயுதக் களஞ்சியங்களை நிரப்பத் தொடங்கியுள்ளதால் பொதுத்துறை நிறுவனங்களின் ஏற்றுமதி வளர்ச்சி அதிகமாகியுள்ளதாகவும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான 1,800 அனுமதிகளைப் பெற்றுள்ளதாவும் ராஜேஷ் குமார் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ள பாதுகாப்புத் துறை செயலாளர், ஆகாஷ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பீரங்கி அமைப்புகளை ஆர்மீனியாவுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதிக்குப் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்களும் இறுதி செய்யும் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.

வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகள், செயல்திறன் சார்ந்த மற்றும் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஒரு பாதுகாப்புத் தொழில்துறைக்கு வழிவகுத்துள்ளன.

இந்த வளர்ச்சிப் பாதையில் பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் அங்கீகாரங்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறை ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பு ஏற்றுமதியை நாட்டின் பாதுகாப்பு உற்பத்தித் துறை ஒழுங்குபடுத்தியுள்ளன.

பாதுகாப்பு உபகரணங்களுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக இந்திய உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா பாதுகாப்பு ஏற்றுமதியில் ஒரு மகத்தான வெற்றிக் கதையை எழுதி வருகிறது என்பதே உண்மை

Tags: defence equipment domestically.Make in indiaSelf-relianceDefence Secretary Rajesh Kumar Singhdefence export target
Share
Tweet
SendShare
Previous Post

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Next Post

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies