அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
அப்போது, கூட்டணியில் முக்கிய கட்சி என்ற அடிப்படையில் காங்கிரசுக்கு முக்கியவத்துவம் அளித்தோம். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை என தெரிகிறது. அவர்களின் கவனம் முழுவதும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உள்ளது. அந்த தேர்தல் முடிந்ததும் மீண்டும் எங்களை அழைப்பார்கள் என்று தெரிகிறது என அவர் சாடியுள்ளார்.
இண்டி கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர் ஒருவரே காங்கிரஸ் மீது வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளது அக்கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.