தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து ஒட்டுமொத்த காற்று தரக்குறியீடு மிக மோசம் என்ற பிரிவில் உள்ளது.
தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இன்று 6-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. மிகவும் மோசமான நிலையில் காற்று மாசு 385 ஆக இருந்தது. இது புதன் கிழமை 364 ஆக பதிவு செய்யப்பட்டது. கடுமையான மூடுபனி காரணமாக மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ஆனந்தவிகார், பவானி மற்றும் ரோகினி போன்ற பகுதிகளில் காற்று மாசு பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டது. பகலில் தெளிவான வானம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. காற்று மாசு 301 முதல் 400 வரை என்பது மிகவும் மோசமானதாகும்.