ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றையப் போட்டியில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா முதல் பந்தில் 4 அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலி, சுப்மன் கில்லுடன் இணைந்து சிறப்பாக விளையாடி வந்தார். இருவரும் பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்களாக இலங்கை பந்தை தெறிக்கவிட்டனர்.
இருவரின் பார்ட்னெர்ஷிப்பால் 100 ரன்களை கடந்தது. அப்போது 30 வது ஓவரில் சுப்மன் கில் 11 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 92 பந்துகளில் 92 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக 31 வது ஓவரில் விராட் கோலி 11 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 94 பந்துகளில் 88 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இவர்களை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல். ராகுல் 2 பௌண்டரிஸுடன் 19 பந்துகளில் 21 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இவரையடுத்து சூரியகுமார் யாதவ் அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வர் என்று எதிர்பார்க்க நிலையில் 2 பௌண்டரியசுடன் 9 பந்துகளில் 12 ரன்களை எதுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா ஸ்ரேயாஸ் ஐயருடன் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து வந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் குறைந்த பந்திலேயே அரைசதம் எடுத்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் சதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 56 பந்துகளில் 82 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 300 ரன்களை கடந்துள்ளது என்றே சொல்லலாம். ஸ்ரேயாஸ் ஐயர் 6 சிக்சர்கள் மற்றும் 3 பௌண்டரீஸ் அடித்து மும்பை மைதானத்தையே அதிரவிட்டுளார் என்றே சொல்லலாம்.
அடுத்ததாக விளையாடி வந்த ஜடேஜா ஒரு பௌண்டரிய மற்றும் ஒரு சிக்சர் அடித்து மொத்தமாக 24 பந்துகளில் 35 ரன்களை எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்களும், துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
அடுத்ததாக 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிஸ்ஸங்கா மற்றும் திமுத் கருணாரத்னா களமிறங்கினர்.
முதல் ஓவர் இந்திய வீரர் பும்ரா வீசினார். முதல் ஓவரில் முதல் பந்தே LBW ஆகா பும்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. இதனால் பதும் நிஸ்ஸங்கா டக் அவுட் ஆகி வெளியே சென்றார்.
பின்னர் அடுத்த 2 பந்துகளை பும்ரா அகல பந்தாக வீசினார். இதனால் முதல் ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 2 ரன்களை மட்டுமே இலங்கை அணி எடுத்திருந்தது.
அடுத்த ஓவரை இந்திய அணியின் முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தும் விக்கெட் ஆகா மாறியது. பின்னர் சதீர சமரவிக்ரமா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர்.
மீண்டும் அதே ஓவரில் 5 வது பந்தில் சதீர சமரவிக்ரமா கேட்ச் அவுட் ஆனார். பின்னர் 4 வது ஓவரை இந்திய வீரர் முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
பின்பு அடுத்தத்தக்க அகளமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணியின் அதிகபட்ச ரன்களாக இலங்கை அணியின் பந்துவீச்சாளர் கசுன் ரஜிதா அடித்த 14 ரன்கள் இருந்தது.
மேலும் இலங்கை அணியின் மகேஷ் தீக்ஷனா 12 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமலும், இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் இருந்தனர்.
இந்தியா அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களும், முகமது சிராஜ் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களும், ஜடேஜா 4 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும், பும்ரா 8 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது.
இதில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் அரையிறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.