பூடான் மன்னர் ஜிக்மே கேசர் 8 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் அரசு முறை பயணமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் இந்தியா வந்தார். அப்போது குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை அவர் சந்தித்தார்.
இந்நிலையில், 8 நாள் பயணமாக பூடான் மன்னர் இன்று இந்தியா வருகிறார். அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்கிறார். இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை பூடான் மன்னர் சந்திக்கிறார். அப்போது இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர். வாங்சக் தனது பயணத்தின் போது அஸ்ஸாம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விஜயம் செய்கிறார்.
சீனாவும் பூட்டானும் 25வது சுற்று எல்லைப் பேச்சுவார்த்தையை நடத்தி, “பூடான்-சீனா எல்லையை வரையறுத்தல் மற்றும் வரையறுக்கப்பட்ட கூட்டு தொழில்நுட்பக் குழுவின் பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள்” குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில வாரங்களுக்குப் பிறகு பூடான் மன்னர் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.