2023 ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முகமது ஷமி மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் நிலையில் ஆறாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
நேற்று இந்தியா – இலங்கை அணிகள் ஆடியப் போட்டியில் இலங்கை வீரர் பதும் நிசங்கா 5 விக்கெட்கள் வீழ்த்தினார். மறுபுறம், இந்திய அணியின் பும்ரா 1, முகமது சிராஜ் 3, முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினர்.
இதன் முடிவில், அதிரடியாக இலங்கை வீரர் மதுசங்கா அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அவர் 7 போட்டிகளில் 18 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். பும்ரா 7 போட்டிகளில் 15 விக்கெட்கள் வீழ்த்தி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
முகமது ஷமி 3 போட்டிகளில் மட்டும் ஆடி 14 விக்கெட்கள் வீழ்த்தி ஆறாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்திய நிலையிலும் 7 போட்டிகளில் 9 விக்கெட்கள் மட்டுமே எடுத்து 17வது இடத்தில் இருக்கிறார்.
குல்தீப் யாதவ் 7 போட்டிகளில் 10 விக்கெட்கள் வீழ்த்தி 14வது இடத்தில் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா 7 போட்டிகளில் 9 விக்கெட்கள் வீழ்த்தி 17வது இடத்தில் இருக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஆடம் ஜம்பா 6 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தி இடம் பெற்றுள்ளார். ஷஹீன் ஷா அப்ரிடி 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தியும், மார்கோ ஜான்சென் 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தியும் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இருக்கின்றனர்.
ஐந்து, ஆறாவது இடத்தில் பும்ரா, ஷமி இருக்கும் நிலையில், அடுத்த இரு லீக் போட்டிகளில் அவர்கள் முதல் இடத்துக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா 6 போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள நிலையில், அவர் இன்னும் மூன்று போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்த வாய்ப்பு உள்ளது.
அவருக்கும், பும்ரா, ஷமிக்கும் இடையே அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம். மதுசங்கா அடுத்த இரு லீக் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தினால் அவரும் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.