இந்திய வம்சாவளியினர் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில் கொழும்பில் நடைபெற்ற “நாம் 200” நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
அண்ணாமலை மலையக தமிழ் மக்களிடம் பேசுகையில்,
2017 ஆம் ஆண்டு டிக்கோயாவிற்கு தனது முதல் பயணத்தின் போது, பிரதமர் மோடி 120 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனையைத் திறந்து வைத்தார், மேலும் மலையகத் தமிழர்களுக்காகக் கட்டப்பட்ட 4,000 வீடுகளையும் அரசு ஒப்படைத்தார். மேலும் 10,000 வீடுகள் தமிழர்களுக்கு விரைவில் அளிக்கப்படும் என்பதை மலையக தமிழ் சமூகத்திற்கு உறுதியளித்தோம்.
தமிழ் சமூகத்தின் உயிர்நாடியான TANTEA தொழிற்சாலையை மூட தமிழக அரசு திட்டமிட்டபோது, தமிழ் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக நீலகிரியில் தமிழக பாஜக போராட்டம் நடத்தியது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நாகரீக உறவின் அடையாளமாக விளங்கும் இந்த வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக என்னை அழைத்ததற்காக நன்றி எனத் தெரிவித்தார்.