நேற்றையப் போட்டியில் சிறந்த பீல்டர் யார் என்பதை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவித்தார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 357 ரன்களை எடுத்தது.
அதைத் தொடர்ந்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியை 20 ஓவர்களுக்குள் சுழற்றி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா அணி அட்டகாசமாக பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் செய்தது. இந்நிலையில் ஒவ்வொரு இந்திய போட்டிக்கும் பின்னரும் இந்திய பீல்டிங் கோச் சிறப்பாக பீல்டிங் செய்த வீரர்களுக்கு தங்க பதக்கத்தை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் நேற்றையப் போட்டியில் இந்திய பீல்டிங் கோச் திலிப் அவர்கள் சிறப்பாக பீல்டிங்
செய்த அனைவரையும் பாராட்டினார். பின்பு சிறந்த பில்டர் யார் என்பதை வெளிப்படுத்த அந்த அறையில் இருந்த தொலைக்காட்சியை பார்க்க சொன்னார்.
அதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த விருது குறித்தும், இந்திய அணியை குறித்தும் பேசினார். பின்னர் சிறந்த பில்டராக 2 கேட்ச் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்தெடுத்தார்.
பின்பு கே.எல்.ராகுல் ஸ்ரேயாஸ் இயருக்கு தங்க பதக்கத்தை வழங்கினார். பின்பு ரோஹித் சர்மா சச்சின் டெண்டுல்கருக்கு தனது நன்றியை கூறினார்.