திருக்கோவில் நிதியை எடுக்காமல் கலாச்சார மையத்தை கட்ட வேண்டும் என இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்கோவில் சொத்துக்கள் மற்றும் ஆதினங்கள் சொத்துக்கள் அனைத்தும் கடவுளின் பெயரில் உள்ள சொத்துக்களாகும். அந்த சொத்துக்களை விற்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
அப்படிபட்ட சூழ்நிலையில், ஆதினங்கள் மற்றும் திருக்கோவில் சொத்துக்களுக்கு தமிழக அரசு எப்படி பட்டா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கதக்கது.
இந்த அரசாணை சட்டப்படி செல்லாது என்று திமுகவுக்கு தெரிந்தும், மக்களை ஏமாற்றும் வேளையில் ஈடுபட்டுள்ளது.
திருக்கோவில் சொத்துக்களை பாதுகாப்பது தான் அரசின் கடைமை. அப்படி இருக்கையில் அதிகாரம் இல்லாத விசயத்தில் ஆணை பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தை இந்து முன்ணி சட்டரீதியில் எதிர்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.