இந்தியா வந்துள்ள பூடான் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
8 நாள் பயணமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் இந்தியா வந்துள்ளார். அவரை கவுகாத்தி விமான நிலையத்தில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வரவேற்றார்.
அரசர் வாங்சுக்கின் நினைவாக கலாசார நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பூடான் மன்னர் கலந்துகொள்கிறார். நாளை அவர் உலக பாரம்பரிய சின்னமான காசிரங்கா தேசிய பூங்காவை பார்வையிடுகிறார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மற்றொரு கலாச்சார நிகழ்ச்சியை காசிரங்காவில் நாளை மாநில அரசு நடத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் பூடான் மன்னர் இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கிறார். வாங்சக் தனது பயணத்தின் போது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செல்கிறார்.