தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மழையின் காரணமாக, குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பிரதான அருவிகள் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், 2 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மெயின் அருவி, குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழையின் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அவை ஒவ்வொன்றாக நிரம்பும் நிலையை எட்டி வருகின்றன.