தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன், கடந்த 2022-ம் ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் உள்ளிட்ட 21 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்தப் பொருள்கள் தரமற்று உள்ளதாகவும், குறிப்பாக, வெப்பத்தால் வெல்லம் உருகி வழிவதாகவும், பச்சரிசி பொட்டலங்கள் உடைக்கப்பட்டு இருந்ததாகவும், ஏலக்காய் அளவு மிகவும் குறைவாக இருந்ததாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொங்கல் தொகுப்பில் சுமார் 1296.88 கோடிக்கு முறைகேடு செய்யப்பட்டதாகச் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் லோக் ஆயுத்தா நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, பல்வேறு முறைகேடுகளில் சிக்கித் திணறி வரும் திமுக அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.
இந்த நிலையில், முறைகேடு புகார் விவகாரத்தில், அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் லோக் ஆயுத்தாவில் சிக்கியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.