நேபாள அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்து வெற்றி பெற்றதன் மூலம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேபாள நாட்டில் அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று காத்மாண்டுவில் உள்ள முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளம் இடையே அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர்களாக முகமது வாசிம் மற்றும் காலித் ஷா களமிறங்கினர்.
இதில் முகமது வாசிம் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அவருடன் விளையாடி வந்த காலித் ஷா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதே ஓவரில் சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் முகமது வாசிம் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய விருத்தியா அரவிந்த் சிறப்பாக விளையாடி 8 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து 51 பந்துகளில் 64 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஐக்கிய அரபு அமீரகம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தது.
நேபாளத்தில் அதிகபட்சமாக குஷால் மல்லா 3 விக்கெட்களும், சந்தீப் 2 விக்கெட்களும், சோம்பல் கமி மற்றும் ரோஹித் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணியின் தொடக்க வீரர்கள் குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் களமிறங்கினர்.
இதில் 2 வைத்து ஓவரிலேயே குஷால் புர்டெல் 2 பௌண்டரிஸுடன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குலேசன் ஜஹா சிறப்பாக விளையாடி 3 பௌண்டரிஸுடன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரோஹித் சிக்சர்களாக அடிக்க தொடக்க வீரராக களமிறங்கிய ஆசிப் ஷேக் பௌண்டரிசாக அடித்து வெளுத்தனர்.
இறுதியாக 17 ஓவர்கள் முடிவில் ஆசிப் ஷேக் 7 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 51 ரன்களில் 64 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேப்போல் ரோஹித் 2 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 20 பந்துகளில் 34 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் நேபாள அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்து வெற்றி பெற்றதன் மூலம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது.