திமுகவின் ராகுகால அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிகாலை துவங்கிய ஐ.டி. ரெய்டு, 2 -வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வே.வேலுவின் சென்னை, திருவண்ணாமலையில் உள்ள பங்களா, அலுவலகம், அவர் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. அதிரடி காட்டி வருகிறது.
குறிப்பாக, எ.வ.வேலுவின் மகன் கம்பன் குடியிருக்கும், திருவண்ணாமலை அடுத்துள்ள கீழ்நாச்சிப்பட்டி பங்களாவிலும், அருணை பொறியியல் கல்லூரியிலும் தீவிர சோதனை நடைபெறுகிறது.
மேலும், அமைச்சரின் பினாமிகள் உலா வரும், கரூர் மாவட்டத்தில் 2 -வது நாளாக, திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் பங்களா. அமைச்சரின் உதவியாளரான சுரேஷின் ஃபைனான்ஸ் நிறுவனம், பங்களா உள்ளிட்ட 20 இடங்களிலும் சோதனை நீண்டுள்ளது.
அதேபோல, கோவை திமுக நிர்வாகியும், வேலுவின் பினாமியுமான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் சோதனை தொடர்கிறது.
கரூரில் ஏற்கனவே, 10 ரூபாய் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சோதனை சென்றபோது, கட்சி நிர்வாகிகள் அதசிகாரிகளை தாக்கியதால், தற்போது, துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 25 கோடி ரூபாய் வரை கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஐ.டி. ரெய்டு குறித்த தகவல் முன்பே கசிந்துவிட்டதாகவும், இதனால், திமுகவினர் உஷாராகிவிட்டதாகவும் ஒரு செய்தி உலா வருகிறது. அது தொடர்பாகவும் ரகசிய விசாரணை நடக்கிறது.