சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக எதிர்க்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக அறிக்கையை வெளியிட்ட பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எதிர்க்கவில்லை என்றும், அனைவரையும் கலந்தாலோசித்த பிறகு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்து பொருத்தமான முடிவை கட்சி எடுக்கும் என்று தெரிவித்தார்.
பாஜக ஒரு தேசிய கட்சி என்றும், இந்த விஷயத்தில் நாங்கள் வாக்கு அரசியல் செய்யவில்லை என்றும் அமித் ஷா கூறினார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் காங்கிரஸ் பிளவுபடுத்தி ஆதாயம் தேட முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில் மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.