நமது நாட்டிற்குத் திரவ இயற்கை எரிவாயு எனப்படும் எல்என்ஜி அதிக அளவில் ஏற்றுமதி செய்வதில், மற்ற நாடுகளைக் காட்டிலும் கத்தார் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இந்த நிலையில், கத்தார் நாட்டைச் சேர்ந்த, கத்தார் ஏர்வேஸ் விமானச் சேவை நிறுவனம், ரூ.5,700 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தற்போது இந்திய அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீதான விசாரணையை அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால், கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.
உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், இந்தியக் கடற்படை முன்னாள் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேருக்கு கத்தார் அரசு அண்மையில் மரண தண்டனை வழங்கியது. அவர்களை மீட்க மத்திய அரசு ராஜதந்திர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீதான இந்த வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு இருநாட்டு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, எல்என்ஜி இறக்குமதியில் சிக்கல் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.