பட்டாசு வியாபாரிகளை வஞ்சிக்கும் திமுக அரசு : அண்ணாமலை
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டாசு வியாபாரிகளை வஞ்சிக்கும் திமுக அரசு : அண்ணாமலை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

பண்டிகைக் கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து, உடனடியாக விண்ணப்பித்துள்ள பட்டாசு வியாபாரிகள் அனைவருக்கும் உரிமம் வழங்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“அனைத்துத் தரப்பு பொதுமக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்கு, இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில், பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோருக்கு, இன்னும் பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று விதிமுறை கொண்டு வந்த திமுக அரசு, அதற்கான கட்டணம் ரூபாய் 600 வசூலித்து விட்டு, உரிமம் வழங்காமல் தமிழகம் முழுவதும் சுமார் 7,000 சிறு வியாபாரிகளை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. உரிமம் கிடைக்காததால் ஆலைகளிலிருந்து பட்டாசுகளைக் கொள்முதல் செய்ய முடியாமல் சிறு வணிகர்களும், பட்டாசு ஆலைகளும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

விற்பனை உரிமம் வழங்காமல் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மட்டும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகளை ஆலைகளில் முடங்க வைத்திருப்பது, திமுக அரசின் உண்மையான நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது.

பல கோடி செலவு செய்து, வீண் விளம்பரங்களுக்கு முன்னுரிமை கொடுத்துத் திட்டம் தீட்டும் திமுக, மக்களின் பண்டிகைக் கால வாழ்வாதாரத்தை, மெத்தனப் போக்கில் அணுகுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பட்டாசு விற்பனை உரிமம் பெற ஆகும் காலதாமதம், பெரும் விற்பனையாளர்களுக்கு மட்டுமே பலன் தருவதோடு, பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில்,கடும் விலையுயர்வையும் பொதுமக்கள் எதிர்கொள்ளக் காரணமாக இருக்கும் என்பதால், திமுகவினர் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் தற்போது பட்டாசு விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்களோ என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது.

திமுகவினர் வரலாறு அப்படி இருப்பதால், பொதுமக்களின் இந்தக் கேள்வியைப் புறம்தள்ளி விட முடியாது.
முந்தைய ஆண்டுகளில், காவல்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய மூன்று துறைகளில் அனுமதிக் கடிதம் பெற்றாலே உரிமம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கூடுதலாக, தாசில்தாரிடமும், தனிநபர் ஒருவரிடமும், மொத்தம் ஐந்து அனுமதிக் கடிதங்களை வியாபாரிகள் பெற வேண்டும் என திமுக அரசு கூறியிருக்கிறது. இவற்றில் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, உரிமம் வழங்குவதைத் தட்டிக் கழிக்கிறது திமுக அரசு. இதனால், சிறு வியாபாரிகளே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உரிமம் வழங்க, தேவையின்றி காலம் தாழ்த்துவது முறைகேட்டிற்கே வழிவகுக்கும். திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கு, பொதுமக்கள் மத்தியில், தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தையே பாதிக்கும். அதுதான் திமுகவின் நோக்கமாகவும் தெரிகிறது.

பண்டிகைக் கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து, விண்ணப்பித்துள்ள பட்டாசு வியாபாரிகள் அனைவருக்கும் உரிமம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்னும் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைப் போராட்டத்திற்குத் தூண்ட வேண்டாம் என்றும் திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: crackers
ShareTweetSendShare
Previous Post

சோகத்தில் பாகிஸ்தான் : 402 ரன்கள் இலக்கு !

Next Post

ஆட்சியில் இருக்கும்போதே சூதாட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள்: ஸ்மிருதி இரானி தாக்கு!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies