பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் புதிய மசோதாவை இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி முன்மொழிந்தார்.
இத்தாலியில் தற்போது உள்ள நடைமுறையின் கீழ், வாக்காளர்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பதில்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியல்வாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லாத, தங்கள் தலைவரை, அரசு தலைவராக தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில் பிரதமரை நேரடியாக தேர்வு செய்வதற்கான மசோதானை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி நேற்று அறிமுகப்படுத்தினார். கடந்த தசாப்தத்தில் தேசத்தை உலுக்கிய தொடர்ச்சியான அரசியல் உறுதியற்ற தன்மையை மேற்கோள் காட்டி பிரதமர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் (அதன்) அரசியல் திசைக்கு சாதகமாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய விதியின்படி பிரதமர் மாற்றப்பட வேண்டும் என்றால், பெரும்பான்மையை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் மட்டுமே மாற்ற முடியும்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டு முறை நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டால், அது நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும்.
இத்தாலி பிரதமரின் இந்த மசோதாவின் வெற்றி நிச்சயமற்றது என்று கூறப்படுகிறது. ஏனெனில் அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.