திருவள்ளூர் அருகே கொரக்கம்பேடு சேர்ந்த குரு மது குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பேரம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்ற அரசு பேருந்து கூவம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.
அப்போது, போதையில் இருந்த குரு பேருந்தின் குறுக்கே தனது வாகனத்தை நிறுத்தி பேருந்தை எடுக்கக் கூடாது என பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அத்தோடு, அருகே இருந்த கட்டையை எடுத்து சென்று பேருந்து முன் பக்க கண்ணாடி, ஓட்டுநர் இருக்கை அருகே இருந்த கண்ணாடி, பின்பக்க கண்ணாடி, பக்கவாட்டு கண்ணாடி என அனைத்து கண்ணாடிகளையும் அடித்து உடைத்துள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் அளறியடித்து பேருந்தில் இருந்து ஓட்டம் எடுத்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.