பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது நபருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு வந்தார்.
இதனால், இந்த நோய்க்கு சிகிச்சை பெற போபாலில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மூளையில் உள்ள மோட்டார் கார்கெடஸ் பகுதியில் கட்டி வளர்ந்துள்ளதை கண்டுபிடித்தனர். இதனை உடனே அகற்ற வேண்டும் என்பதற்காக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
வழக்கமாக அறுவை சிகிச்சை செய்யும்போது, மயக்க மருந்து செலுத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த சிகிச்சையின்போது, நோயாளி விழிப்போடு இருக்க வேண்டியதும், அப்போதுதான் அவரது உடல் இயக்கங்களை கண்காணித்தபடியே அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
இந்த நிலையில், அந்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது, மருத்துவர்கள் அவரிடம் மெல்லமாக பேச்சுக் கொடுத்தனர். ஆனால், அவரோ, பியானோ வாசித்தப்படியே இருந்தார். இந்த நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.