உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டராக பதிவாகி உள்ளது.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் அயோத்திக்கு வடக்கே 215 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இது லேசான நிலநடுக்கம் என்பதால், எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.