ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.25 மணிக்கு பைசாபாத் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ரிக்டராக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் தங்களுடைய உறவினர்களையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.