டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து தொடக்கப்பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாகக் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது. டெல்லி புறநகர மற்றும் அண்டை மாநிலங்களில் தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்துவதாலும்,
தொழிற்சாலை மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. காற்று மாசுவில் இருந்து விடுபட ஏராளமானோர் குலு, மணாலி, உத்தரகாண்ட்ட உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
காற்றின் ஒட்டு மொத்த தரக் குறியீடு (AQI) 346 ஆக உள்ளதாகவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை தெளித்து வருகிறார்கள். இந்நிலையில், தொடக்க பள்ளிகளுக்கு (primary schools)நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.