‘ஒரே ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம்’ என்ற கருப்பொருள் செய்தியுடன் நாடு முழுவதும் 11 நகரங்களில் இளைஞர்களின் இருசக்கர வாகனப் பேரணி இன்று நடைபெற்றது.
‘ஒரே ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம்’ என்ற கருப்பொருள் செய்தியுடன் நாடு முழுவதும் 11 நகரங்களில் இருசக்கர வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை பல்வேறு நகரங்களில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிகளின் முக்கிய நோக்கம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை ஆயுர்வேத தினக் கொண்டாட்டத்தில் இணைப்பதும், ஆயுர்வேதத்தின் வளமான பாரம்பரியத்தை ஊக்குவிப்பதும் ஆகும்.
டெல்லி, சென்னை, லக்னோ, நாக்பூர், ஜெய்ப்பூர், பாட்டியாலா, குவாலியர், ஹைதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம், அகமதாபாத் ஆகிய 11 நகரங்களில் இந்தப் பேரணிகள் நடத்தப்பட்டது. ‘ஒரே ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம்’ இயக்கத்துடன் இளைஞர்களை இணைப்பதன் மூலம் வலுவான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறினார்.
ஆயுர்வேத தினம் நவம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆயுர்வேத தினத்தையொட்டி, ஆயுஷ் அமைச்சகத்தால், ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.