கொடிய அரக்கான நரகாசுரனை, கிருஷ்ண பகவான் வதம் செய்ததைக் கொண்டாடும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்துக்களின் பண்டிகையாகும். தீமையை அழித்து, நன்மையைக் காத்து, உலகில் உள்ள இருளை அகற்றுவதாக ஐதீகம்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டும் வரும் நவம்பர் 12 -ம் தேதி ஞாற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை வருகிறது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை ஒரு நாள் மட்டுமே கொண்டாடுகிறது. ஆனால், மற்ற பல மாநிலங்களில் 5 நாள் வரை கொண்டாடப்படுகிறது.
அமாவாசை விரதம் இருப்பவர்கள் நவம்பர் 13 -ம் தேதி காலையிலேயே துவங்க வேண்டும். நவம்பர் 12 -ம் தேதி மாலை 05.40 மணி முதல் இரவு 07.36 வரை லட்சுமி பூஜை செய்யச் சிறந்த நேரமாகும்.
நவம்பர் 12 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரை ராகு காலமும், பகல் 12 மணி முதல் 01.30 மணி வரை குளிகை நேரமும் உள்ளதால், இந்த நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் லட்சுமி பூஜை செய்யலாம்.
இந்த நேரத்தில் லட்சுமி தேவியையும், விநாயகர் மற்றும் குபேரரை வழிபடுவதால் வற்றாத செல்வம் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.