உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி !
Sep 12, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி !

Murugesan M by Murugesan M
Nov 5, 2023, 12:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் முதல் பெங்களுருவில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இரண்டாம் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.

இதில் இரண்டாவது ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் 11 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்பு டேவிட் வார்னர் 6 வது ஓவரில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவர்களைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 22 வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் 3 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 52 பந்துகளில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் சிறப்பாக விளையாடி வந்த மார்னஸ் அடுத்த 2 ஓவர்களில் 7 பௌண்டரிஸுடன் 83 பந்தில் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக விளையாடி 5 பௌண்டரிஸுடன் 52 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 223 ஆகா இருந்தது.

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க ஆடம் சம்பா 29 ரன்களும் மார்கஸ் ஸ்டோனிஸ் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்களும், மார்க் வூட் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் டேவிட் வில்லி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் களமிறங்கினர்.

இதில் ஜானி பேர்ஸ்டோவ் ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 4 வது ஓவரில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் டேவிட் மாலன் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தனர்.

இதில் டேவிட் மாலன் 23 வது ஓவரில் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து மொத்தமாக 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் 3 சிக்சர்ஸ் மற்றும் 2 பௌண்டரீஸ் என் மொத்தமாக 90 பந்துகளில் 64 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய மொயின் அலி 6 பௌண்டரீஸ் என அடித்து 42 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என அடித்து மொத்தமாக 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 253 ரன்களை எடுத்தது.

ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ஆடம் சம்பா 3 விக்கெட்களும், மிட்செல் ஸ்டார்ச், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்களும் மார்கஸ் ஸ்டோனிஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்களை வீஸ்த்ய ஆஸ்திரேலியா வீரர் ஆடம் சம்பாவுக்கு வழங்கப்பட்டது.

Tags: ICC World Cupaustralia cricket
Share
Tweet
SendShare
Previous Post

கேரள குண்டு வெடிப்பு – 54 வழக்குகள் பதிவு!

Next Post

தீபாவளி பண்டிகை!

Related News

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies