திமுகவின் ராகுகால அமைச்சரான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3 -வது நாளாக ஐடி ரெய்டு தொடர்கிறது.
வேலுவின் திருவண்ணாமலை இல்லம், அருணை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கம்பன் மகளிர் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், அருணை கிரானைட், ஜீவா வேலுஇன்டர்நேஷனல் பள்ளி ஆகிய இடங்களில் சோதனை தொடர்கிறது.
சென்னையில், வேலுவின் ஆழ்வார்பேட்டை வீடு, 2 தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், விழுப்புரத்தில், ஆளவந்தார் மோட்டார்ஸ், கோல்டன் கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர் பிரேம்குமார் வீடு, கடை, ஹெஸ்ட் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களிலும் 3-வது நாளாகச் சோதனை நடைபெறுகிறது.
கோவையில், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு, அலுவலகம், அவரது மகன் ஸ்ரீராம் வீடு, சிங்காநல்லூரில் திமுக முன்னாள் கவுன்சிலர் எஸ்.எம்.சாமி இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலு தொடக்கத்தில் அதிமுகவிலிருந்தாலும், 2000-ல் இருந்து திமுகவில் உள்ளார். இதனால், திமுக தலைவர் ஒருவரின் பினாமியாக இவர் செயல்படுவதாகவும், ஏராளமான தொழில்களை செய்து வருவதாலும். வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளார். இதனாலே, வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது. இதுவரை சுமார் 25 கோடி ரூபாய் வரை ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.டி. ரெய்டு நடைபெறும் இடங்களில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.