தீபாவளி பண்டிகைக்கு இன்னமும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், புத்தாடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவைகளை வாங்க மக்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
இதில், எந்த பட்டாசு வாங்க வேண்டும்? என்பதில்தான் குழப்பம். அதிலும், பசுமைப் பட்டாசை எப்படித் தேர்வு செய்வதில் மேலும் குழப்பம்.
பட்டாசு வெடிக்கும் போது அதில் பச்சை நிறம் வந்தால் அது பசுமை பட்டாசு என்பது தவறு. பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு தயார் செய்தால் மட்டுமே பச்சை நிறம் வரும். இதனால், அந்த வேதிப் பொருளுக்கு அரசு தடை விதித்துள்ளது.
இதனால் பொட்டாசியம் நைட்ரேட் கலந்து நீலம், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் மட்டுமே வெடிகள், மத்தாப்பு, புஸ்வானம் தயார் செய்யப்படுகின்றன. மேலும், பட்டாசு பெட்டியின் மீது பசுமை பட்டாசு என்ற லோகோ இருக்கும். இதனை மக்கள் தேர்வு செய்து வாங்கி வெடித்தால், பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடலாம்.
மற்ற பட்டாசுகளின் விலைக்குச் சமமாகவே பசுமை பட்டாசுகளின் விலையும் இருக்கும். கூடுதலாக இருக்காது. ஆனால், பசுமை பட்டாசிலிருந்து வெளியேறும் மாசின் அளவு, மற்ற பட்டாசுகளைவிட 30 சதவீதம் குறைவாக இருக்கும்.
அரசு அனுமதி வழங்கிய 126 டெசிபெலுக்கு மேல் நாட்டு வெடிகளின் ஒலி வரும், பசுமைபட்டாதுகளை விட விலை குறைவு. ஆனால், இதனைத் தயார் செய்யும் போதே பட்டாசு ஆலையில் வெடி விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன. எனவே, இது போன்ற ஆபத்தான பட்டாசுகளை வாங்கி, வெடிப்பதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றர் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள்.