சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடு முன்னேற்பாடு பணிகளைப் பார்வையிடச் சென்றார் திமுக அமைச்சர் கே.என்.நேரு அப்போது, பந்தல் அமைக்கும் ஊழியர் ஒருவரை எல்லோர் முன்னிலையிலும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பந்தல் காண்ட்ராக்டரிம், பந்தல் கடைசி 300 அடியில்தானே கம்பியா வரனும், 150 -வது அடியிலே 13 அடி உயரம் வைத்தால் எப்படி என ஆவேசப்படும் கே.என்.நேரு, போட்ரா… என அதட்டி அவரிடம் போனைக் கொடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
போலீசார், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், தொழிலாளி ஒருவரை அவமரியாதையாக பேசியதற்குக் கண்டனம் வலுத்து வருகிறது.
திமுக அமைச்சர் கே.என்.நேரு சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அமைச்சர் உதயநிதியுடன் போட்டோ எடுக்க முயன்ற தொண்டர் ஒருவரை அடித்துத் தள்ளிவிட்டது, சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா பிரஸ் மீட்டில் அதட்டியது, திருச்சி சிவா எம்.பி, இல்லத்தில் தாக்குதல் எனத் தொடர் சர்ச்சைகள் சிக்கி வருகிறார்.