ஜெர்மனியில் பணயக்கைதிகளுடன் காரை விமானத்திற்கு ஓட்டிசென்ற மர்ம நபரால் 12 மணி நேரமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் ஹாம்பர்க் விமான நிலையத்தில் நேற்று கார் ஒன்று தடுப்புகளை உடைத்துக்கொண்டு அத்துமீறி நுழைந்துள்ளது. அந்த காரில் சென்ற மர்ம நபர் இரு முறை துப்பாக்கியால் சுட்டபடியும், காலி பாட்டில்களை வானத்தை நோக்கி எறிந்தபடியும் சென்றதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து அந்த கார் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு சென்று நிறுத்தப்பட்டுள்ளது. காரின் உள்ளே 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 4 வயது சிறுமி பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ஹாம்பர்க் விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 12 மணி நேரமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 3 ஆயிரம் பயணிகள் பயணத்தை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.