சுமார் 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மத்திய பிரதேச மாநில வளர்ச்சிக்கு காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சாகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசினார். அப்போது, மத்திய பிரதேச மாநிலத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ், மாநிலத்தை முன்னேற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
ஆனால் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் மாநிலம் சீரான வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாநில வளர்ச்சிக்காக அவர் கடுமையாக பணியாற்றியுள்ளதாகவும் கூறினார். தூய்மையில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 15,82,000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும். இதன் முலம் தொழில் வளர்ச்சியில் மாநிலம் நல்ல நிலையை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்பு, சர்வதேச மேடையில் இந்தியா எதையாவது சொன்னால், இந்தியா பலவீனமானது என்று உலகமே சொல்லும் என்றும், ஆனால் இன்று, சர்வதேச மேடைகளில் இந்தியா சொல்வதை உலகம் கேட்பதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.