50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் முதல் ஓவரில் இருந்தே ரோஹித் சர்மா ரன்களை குவிக்க தொடங்கிவிட்டார்.
பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்களாக விளாசிவந்த ரோஹித் 5 வது ஓவரில் 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 24 பந்துகளில் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து பர்த்டே பாய் விராட் கோலி களமிறங்கினார். ஐவரும் பௌண்டரிசாக அடித்து வந்த நிலையில் 10 வது ஓவரில் கில் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என அடித்து மொத்தமாக 24 பந்துகளில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் மற்றும் விராட்டின் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இவரின் கூட்டணி 100 ரன்களை கடந்தது.
இந்நிலையில் 37 வது ஓவரில் ஸ்ரேயாஸ் 7 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 87 பந்துகளில் 77 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க இவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். சூரியகுமார் யாதவ் வந்த வேகத்தில் 5 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து போனார்.
இவரைத் தொடர்ந்து ஜடேஜா களமிறங்கினார். ஜடேஜா, விராட் சதம் அடிக்க ஒத்துழைப்பு வழங்கி வந்தார். இறுதியாக விராட் கோலி 10 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 121 பந்துகளில் 101 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஜடேஜா 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர்களுடன் 15 பந்துகளில் 29 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் உள்ளார். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் ரபாடா, மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி, கேசவ் மகாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்சி தலா 1 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 327 ரன்கள் இலக்காக உள்ளது.