நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீதான குற்றச்சாட்டு தொடர்பான வரைவு அறிக்கையை ஏற்க மக்களவை நெறிமுறைகள் குழு நவம்பர் 7 ஆம் தேதி கூடுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி என்பவரிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில் கடந்த 2ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மக்களவை நெறிமுறைக்குழு சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து மக்களவை நெறிமுறைக்குழு முன்பு இன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். ஆனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.
இதுதொடர்பாக பாஜக எம்பியும், மக்களவை நெறிமுறைக்குழு தலைவருமான வினோத் சோன்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விசாரணைக்குழுவின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக அநாகரீக முறையில் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்களை மஹுவா மொய்த்ரா விமர்சித்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில், குற்றச்சாட்டு தொடர்பான வரைவு அறிக்கையை ஏற்க மக்களவை நெறிமுறைகள் குழு நவம்பர் 7 ஆம் தேதி கூட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.