உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !
Mar 15, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Nov 6, 2023, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றையப் போட்டியில் இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்றையப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் முதல் ஓவரில் இருந்தே ரோஹித் சர்மா ரன்களை குவிக்க தொடங்கிவிட்டார்.

பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்களாக விளாசிவந்த ரோஹித் 5 வது ஓவரில் 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 24 பந்துகளில் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து பர்த்டே பாய் விராட் கோலி களமிறங்கினார். ஐவரும் பௌண்டரிசாக அடித்து வந்த நிலையில் 10 வது ஓவரில் கில் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என அடித்து மொத்தமாக 24 பந்துகளில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் மற்றும் விராட்டின் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இவரின் கூட்டணி 100 ரன்களை கடந்தது.

இந்நிலையில் 37 வது ஓவரில் ஸ்ரேயாஸ் 7 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 87 பந்துகளில் 77 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க இவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். சூரியகுமார் யாதவ் வந்த வேகத்தில் 5 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து போனார்.

இவரைத் தொடர்ந்து ஜடேஜா களமிறங்கினார். ஜடேஜா, விராட் சதம் அடிக்க ஒத்துழைப்பு வழங்கி வந்தார். இறுதியாக விராட் கோலி 10 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 121 பந்துகளில் 101 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ஜடேஜா 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர்களுடன் 15 பந்துகளில் 29 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் உள்ளார். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ரபாடா, மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி, கேசவ் மகாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்சி தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா களமிறங்கினர்.

இதில் இரண்டாவது ஓவரிலேயே குயின்டன் டி காக் 5 ஓவர்களுக்கு ஆட்டமிழந்தார். அடித்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இப்படியே அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் ஆட்டமிழந்து வந்தனர். இந்தத் தொடரில் சிறந்த பார்மில் இருந்து ஒவ்வொரு போட்டிகளிலும் 300 மேல் ரன்களை குவித்து வந்த தென் ஆப்பிரிக்கா இந்தியாவின் பந்துவீச்சில் பதுங்கி பதுங்கி விளையாடியது.

தென் ஆப்பிரிக்கா அணியின் ஒரு வீரர் கூட 15 ரன்களை எடுக்கவில்லை என்பது தான் சோகம். தென் ஆப்பிரிக்காவின் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 14 ரன்களை வீழ்த்தினார்.

27 வது ஓவர் முடிய தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 83 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

இந்திய அணியில் ஜடேஜா 9 ஓவர்கள் பந்துவீசி 33 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களும், குலதீப் யாதவ் 5 ஓவர்கள் வீசி 7 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அதேபோல் முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 11 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 121 பந்துகளில் 101 ரன்களை எடுத்த விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

Tags: india won cricketindia vs south africa
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகை! – துணிக் கடைகளில் மக்கள் கூட்டம்!

Next Post

கேரளா குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies